Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலியல் சர்ச்சையில் பிரபல பாடகர்! தவறான செய்தியால் வழக்கு தொடரவுள்ளதாக அறிவிப்பு!
Published on

பெண் RJக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐதராபாத்தை சேர்ந்த பிரபல பாடகர் Ghazal Srinivas நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அது பற்றி செய்தி வெளியிட்ட ஒரு பிரபல இணையத்தளம் Ghazal Srinivas புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு முன்னணி பாடகரான ஸ்ரீநிவாசின் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தது. அதை பார்த்து ஸ்ரீனிவாஸ் அதிர்ச்சி அடைத்தார்.

srinivas
ஸ்ரீனிவாஸ் மலையாள, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி மொழிகளில் 2000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ஒரு பின்னணி பாடகர். அவர் திரைப்படங்களிலும் தனிப்பட்ட ஆல்பங்களிலும் பணிபுரிந்தார் மற்றும் ஒரு சில படங்களுக்கு இசை இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தார்.

srinivas
அவர் தற்போது அந்த இணையத்தளம் மீது வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கோபத்துடன் முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.
