செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

12 வருட பயணத்தில் கிசுகிசுப்பிற்கு சிக்காத ஒரே சின்னத்திரை நடிகர்.. இவர் பாரதிராஜாவின் அண்ணன் மகனாம்!

விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பிரபல இயக்குனரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் தற்போது மிகவும் சிறப்பாக நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் ஸ்டாலின் முத்து. இவர் 12 வருடங்களாகும் மேலாக சின்னத்திரையிலும், அவ்வபோது வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடத்திலும் காணப்படுவார்.

பாசத்திற்குரிய பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுகத்தால் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த நடிகர் ஸ்டாலின் முத்து. தனது 12 வருட திரையுலக வரலாற்றில் இதுவரை எந்த ஒரு கிசுகிசுக்கும் ஆளானது இல்லை. யாரும் இவரை பற்றி இழிவாகவோ அல்லது நெகட்டிவ் சிந்தனையுடனோ கருத்து தெரிவித்ததில்லை.

இவரின் இயல்பான நடிப்பால் இத்தனை ஆண்டு காலமாக திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், மதுரை மற்றும் 7சி போன்ற நாடகத்தில் நடித்திருக்கிறார். இவை அனைத்து சீரியல்களை காட்டிலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் வழியாக அந்த சீரியலின் மூத்த கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஸ்டாலின் முத்து என்று சொல்வதைவிட மூர்த்தி என்று சொன்னால் அனைவரும் எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடுகின்றனர். அந்த அளவிற்கு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடர் இவரை பிரபலமாகியுள்ளது. சமீபத்தில் இவர் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

stalin-cinemapettai

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் சொந்த அண்ணனின் மகன் ஆவார். பாரதிராஜா இயக்கத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் தெற்கத்தி பொண்ணு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்டாலின் முத்து அறிமுகம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இதுவரை 12 ஆண்டு காலமாக சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள சீனியர் நடிகர் ஆவார். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் நாடகத்தில் இவருடன் நடித்த விஜே சித்ரா காலமானபோது இவர் மனசு விட்டு அழுத காட்சி காண்பவர்களையே கண்கலங்க செய்தது. இவருடன் நடிக்கும் இதர நடிகைகள், இவரை ‘பெண்களை மதிக்க தெரிந்தவர்’ என்றும் ‘ரொம்ப மரியாதை ஆனவர்’ என்றும் பாசிட்டிவான சிந்தனையுடன் இவரைப் பற்றி பெருமையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

- Advertisement -

Trending News