தற்போதைய சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் உருவாகி படங்களை தயாரித்து வருகின்றனர். அதிலும் முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகள் உட்பட பலரும் சொந்தமாக திரைப்பட கம்பெனிகளை ஆரம்பித்து திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.
அதன் மூலம் அவர்கள் பல தரமான கதைகளை தயாரித்து பல விருதுகளையும் தட்டிச் செல்கின்றனர். என்னதான் பல விருதுகளை வாங்கினாலும் தேசிய விருது என்பது ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்கிறது. எப்படியாவது இந்த படத்தில் தேசிய விருதை பெற்று விடுவோம் என்று பலரும் தங்கள் முழு உழைப்பைக் கொடுத்து வருகின்றனர்.
அப்படி பலரின் மந்திரச் சொல்லாக இருக்கும் இந்த தேசிய விருது அவ்வளவு சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. திறமையான நடிப்பும், கடுமையான உழைப்பும் இருப்பவர்கள் தான் இந்த விருதை மிக எளிதாக தட்டிச் செல்கின்றனர்.
அந்த வகையில் பல முன்னணி நிறுவனங்களும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வாங்கி இருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக படங்களை தயாரித்து வரும் ஒரு நிறுவனம் மட்டும் இந்த தேசிய விருதை இன்றுவரை வாங்கவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளவர் ஆர்பி சவுத்ரி. இவர் 1980ல் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இப்போது வரை பல படங்களை தயாரித்து வருகிறார்.
அதிலும் தற்போது மாஸ் நடிகராக வலம் வரும் விஜய்யை வைத்து இவர் பூவே உனக்காக, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். மேலும் இவர் குடும்பம், காதல் கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் அல்லாமல் புரியாத புதிர் போன்ற திரில்லர் படங்களையும் தயாரித்து இருக்கிறார்.
இதன் மூலம் அவர் தமிழக அரசின் விருது, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். இன்றுவரை இந்த நிறுவனம் தேசிய விருதை மட்டும் பெறவில்லை. ஒரு காலத்தில் தயாரிப்பு நிறுவனம் என்றாலே சூப்பர் குட் பிலிம்ஸ் தான் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாக இருந்த இந்த நிறுவனத்திற்கு தேசிய விருது கிடைக்காதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.