எம்ஜிஆர் வரலாறு படத்தை எடுக்கும் பிரம்மாண்ட தயாரிப்பாளர்.. ஹீரோவாக தற்போதைய ஸ்டைல் மன்னன்

சமீபகாலமாகவே அரசியல் சார்ந்தவர்கள், விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், திரை உலகில் சாதனை படைத்தவர்கள் போன்ற பல மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வெளியிடுகின்றனர். ஆனால் இத்தகைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் குறைவான வரவேற்ப்பை மட்டுமே பெற்றுள்ளது.

அதிலும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி கூறும் பொழுது அவர்களின் உண்மை சம்பவங்களை முழுமையாக படமாக்க முடியாது. சமீபத்தில் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தலைவி என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் முன் வைத்தனர்.

இந்த திரைப்படத்தில் சிறிய தகவல் பிழை ஏற்பட்டிருந்தது. அது போன்ற எந்த ஒரு பிழையும் ஏற்படாமல் படமாக்க கோரி மக்கள் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் பதிவிட பட்டு வருகிறது. தலைவி திரைப்படத்தில் நடிகை மற்றும் முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா அவர்களாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.

நடிகர் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைவருமான எம்.ஜீ.ஆராக அரவிந்த்சாமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி தலைவர் கருணாநிதி ஆக நாசர், R.M. வீரப்பன்னாக சமுத்திரக்கனி இது போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

thanu-cinemapettai
thanu-cinemapettai

இருப்பினும், இந்த படம் வெற்றிகரமாக ஓடவில்லை என்றாலும், இது போன்ற வரலாற்று படங்களை எடுக்க பல இயக்குனர்களும் முன் வருவது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. கூடிய விரைவில் கலைப்புலி S. தாணு அவர்கள் M.G. ராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளார்.

அதுமட்டுமின்றி, தலைவி படத்தில் எம்ஜிஆர் ஆக நடித்த அரவிந்த்சாமி அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியதால் இந்தப்படத்திலும் கதாநாயகனாக எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி தான் நடிக்கப் போகிறார் என்ற தகவலானது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்