சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பல கோடி காட்ஸ்லி காரால் தரைக்கு வந்த பிரபல வீரர்.. இவருக்கு என்ன ஆச்சு?

பிரபல நிறுவனத்தின் சொகுசு காருக்கு முன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தரையில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில்

இந்த கிரிக்கெட் உலகின் தனக்கென தனி ஸ்டைல் அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் நாடு மொழி பேதமின்றி நேசிக்க வைத்துள்ளவர் கிறிஸ் கெயில். அவரது அதிரடி பேட்டிங்கை பார்த்து எந்த நாட்டு பந்து வீச்சாளர்கலும் சற்று கலங்கித்தான் போவார்கள். அப்படியொரு முன்னணி பேட்ஸ்மேனாக ஜொலித்த ஆறடி 2 அங்குளம் கொண்ட உயர்ந்த மனித தற்போது ஐபிஎல் லீக்கில் பங்கேற்று வருகிறார்.

கடந்த1998 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான தொடரில் மே., தீவுகள் அணிக்காக அதிக ரன்கள் குவித்து, தேசிய அளவில் கவமம் பெற்றார். பின்னர், 1999 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட்டி வரும் கெயில், 2002 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில், முதன்முதலாக முச்சதம் ரன்களை குவித்தார். இதன் மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ், லாராவுக்கு பிறகு ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்த வீரராக அறியப்பட்டார்.

அதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவரின் பரிசோதனையின் போது அவருக்கு இதயக் குறைபாடு இருபது கண்டறியப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிலிருந்து மீண்டு வந்த கெயில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடந்த 2012 ஐசிசி உலக கோப்பை டி20, 2016 ஐசிசி உலகக் கோப்பை டி 20 ஆகிய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டார். அத்துடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் திறமையுடன் செயல்பட்டார்.

இதன் மூலம், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம், டி 20 போட்டிகளில் சதம், டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து மூன்று வகைப் போட்டியிலும் சதமடித்த வீரர் என்ற சாதனைப்படைத்தர். அத்துடன் டி 20 போட்டியில் 14, 000 ரன்களுக்கு மேல் அடித்த வீரர், 1000 ஆயிரம் சிக்ஸர்களுக்கு மேல் அடித்த வீரர், மே, தீவுகள் அணியில் 10,000 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

சொகுசு காருக்கு முன் உட்கார்ந்து போஸ் கொடுத்த கெயில்

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 141 போட்டிகளில் விளையாடி, அதிகட்பட்சமான 175 ரன்கள் என மொத்தமாக 4965 ரன்களும் அடித்து, ஸ்ட்ரைக் ரேட் 149.0 வைத்திருக்கிறார். இந்த நிலையில் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த கெயில் ஒரு காரின் முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது, யுனிவர்சல் பாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் கெயில், விலை உயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் காரின் எஃப் 9 என்று பொறிக்கப்பட்ட காரிற்கு முன்னால் உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கிறார். இந்தக் காரின் விலை பல கோடியாக இருந்தாலும் இந்த பதிவெண் அதைவிட பல மடங்கு விலை அதிகம் கொண்டதால்தான் கெயில் இக்காருக்கு முன்பு அமர்ந்து போஸ் கொடுத்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

அதாவது, துபாயில், ஒற்றை இலக்கம் கொண்ட பதிவெண்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் நிலையில், அங்கு அது பல கோடி மதிப்புள்ளதாகும், இதற்கு வரியும் பல மடங்கு செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி, கெயில் போஸ் கொடுத்திருக்கும் இந்த F 9 காரின் பதிவெண் மட்டும் ரூ. 50 கோடிக்கும் அதிகமான இருக்கும் என தெரிகிறது.

தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்

இதுகுறித்து கெயில் தன் சமூக வலைதள பக்கத்தில்’’, டாப் 10 நம்பர் பிளேட்டுகளில் ஒன்றான இந்தக் காருக்கு முன்னால் அமர்ந்திருக்கிறேன்’’ என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காரைக் காட்டிலும் இந்த பதிவெண் பல கோடி மதிப்புடையது என்பதால் தான் கெயில் பெருமையுடன் அதைக் குறிப்பு அக்காருடன் செல்ஃபி எடுத்து, அதைப் பற்றிப் பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஆனால் திடீரென இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் இவர் எவ்வளவு பெரிய வீரர் இவரே இப்படி தன் மதிப்பை குறைக்கும் வகையில் தரையில் உட்கார்ந்து யாரோ ஒருவரின் காருக்கு போஸ் கொடுக்கலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், அந்தக் கார் ரோல் ராய்ஸ் கோஸ்ட் வகை மாடல் காராலும். சொகுசு காரான இது, ஒரு யூனிட்டின் மதிப்பு என்பது எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.95 கோடி எனவும், இது சொகுசு வகையிலும் ஃபெர்மான்ஸிலும் சிறப்பானது எனவும் கூறப்படுகிறது. இந்தக் கார் 675 லிட்டர் வி 12 வகை பெட்ரோல் என்ஜின், 563 பிஎச்பி மற்றும் 900 என் எம் டார்க்கை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால் இந்தக் காருக்கு உலகளவில் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News