உயிர் இழப்புகள் வருவதை தடுக்க முடியாது, ஆனால் சிறு வயதில் என்று நினைக்கும்போதுதான் மனசு வலிக்கிறது. மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் பிஜிபால். இவரது மனைவி சாந்தி கடந்த சில மாதங்களாக மூளை சம்பந்தப்பட்ட நோயால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 36 வயதான சாந்தி நேற்று மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

பரதநாட்டிய கலைஞரான இவர் 2002ல் பிஜிபாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேவா மற்றும் தயா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அண்மையில் பிஜிபால் இசையமைப்பில் சாந்தி நடனத்தில் வெளியான ஒரு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.