pattanathil bootham

பழம்பெரும் இசையமைப்பாளர் திரு. ஆர். கோவர்த்தனம் அவர்கள் நேற்று காலை காலமானார். இவரது வயது 90. ஸ்வரக்குட்டி என்று திரைப்ரபலங்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்றியர்.

மேலும் இவர் தனியாகவும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவற்றுள் சில ஜாதகம், கைராசி, பட்டணத்தில் பூதம், பொற்சிலை, அஞ்சல்பெட்டி 520 மற்றும் வரப்பிரசாதம் போன்ற திரைப்படங்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமில்லாமல் இளையராஜா தேவா போன்ற இசை மேதைகளுடனும் பணியாற்றியவர் இவர். 1928ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்த இவர் தனது மனைவியுடன் சேலத்தில் வசித்து வந்தார்.

சற்று நாட்களாய் உடல்நலம் குன்றி இருந்த இவர் நேற்று உயிர் துறந்தார்.

சினிமா பேட்டை: எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.