Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகர்களாக களமிறங்கும் முன்னணி இசையமைப்பாளர்கள்! ஐயையோ இவரும் நடிக்க வந்துட்டாரா ?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் டி.இமான் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் நடிகர்களாக களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர்களாக வந்து வெற்றிக் கண்டவர்கள் ஒரு பக்கம் என்றால் வேறு துறையில் ஹிட் அடித்து அந்த பிரபலத்தால் நடிக்க வந்தவர்களும் கோலிவுட்டில் அதிகமாக இருக்கிறார்கள். பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என தொடர்ந்து நடிகராக மாறி ஹிட் கொடுப்பவர்கள் உள்ளனர். பா.விஜய், விஜய் ஆண்டனி, விஜய் யேசுதாஸ், ஜி.வி.பிரகாஷ் ராஜ் ஆகியோர் தமிழ் சினிமாவின் இசையமைப்பில் தான் அறிமுகமானார்கள். அவர்களின் பாடல் வரிக்கும், குரலுக்கு, இசையமைப்பு பணிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நடிகர்களாக அறிமுகமாகி, பல படங்களிலும் நடித்து வருகின்றனர். இதில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. வெற்றி படங்களில் நடித்து தங்களுக்கென தனி இடத்தை பிடித்தும் விட்டார்கள்.
இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் டி.இமான் நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் எழில் இப்போது விஷ்ணு விஷாலை வைத்து `ஜகஜால கில்லாடி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து இயக்கும் படத்தில் இமானை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. குண்டாக இருந்த இமான், சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். ஒல்லியாக மாறியது கூட நடிக்கத்தான் என அப்போதே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இமான் போலவே தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகராக களம் இறங்கவிருக்கிறார். நடிகராக எல்லா தகுதிகளையும் கொண்டவர் தேவி ஸ்ரீ பிரசாத். பொது நிகழ்ச்சிகளில் கூட மற்ற இசையமைப்பாளர்கள் போல நின்று கொண்டெல்லாம் பாட மாட்டார். ஆடி ரசிகர்களையும் தன்னுடன் ஆட வைத்து விடுவார். இவரிடமும் பல இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இவருக்கு வருகிறதாம். ஆனால், சந்தர்ப்பம் மட்டுமே தட்டி செல்கிறதாம். ராம்சரணின் வெற்றிப்படமான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் தேவி ஸ்ரீயை நாயகனாக்க தான் முதலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த சமயத்துல துரதிர்ஷ்டவசமா அவர் அப்பா தவறி விட்டதால் அப்படத்தில் நடிக்கவில்லை. விரைவில் நாயகனாக நடிக்கலாம் என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
