5219கேரள திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருந்த ஜான்சன் என்பவரின் மகளும் எங்கேயும் எப்போதும்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் பாடிய பின்னணி பாடகியுமான ஷான் என்பவர் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 31.

சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஷான், நேற்று வெகுநேரம் வரை அவரது வீடு பூட்டியிருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினர்களுக்கு புகார் அளித்தனர். போலீஸார் வந்த கதவை திறந்து பார்த்தபோது ஷான் இறந்து கிடந்ததையும் அவரது உடல் கருப்பு நிறமாக இருந்ததையும் பார்த்தனர்.

உடனடியாக அவரது பிணத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்த ஷானுக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்றும் அதன் காரணமாகவே அவர் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.