வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நியூயார்க் கூப்பிட்டு கௌரவித்த இசையமைப்பாளர்.. லாரன்ஸின் மறுபிறவியாய் மாறிய பிரபலம்

நடன இயக்குனர் லாரன்ஸ் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தனது குருவாக நினைத்து சினிமாவில் நுழைந்தவர் லாரன்ஸ். மேலும் தன்னால் முடிந்த அளவுக்கு லாரன்ஸ் பல உதவிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படத்தின் நிஜ மாந்தர்களான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு லாரன்ஸ் வீடு கட்டி தருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அரசு வீடு கட்டி தருவதாக உறுதி அளித்த பின்பு ஒரு லட்சம் ரொக்கப் பணத்தை லாரன்ஸ் வழங்கியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தனது அறக்கட்டளை மூலம் லாரன்ஸ் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார். அதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். அவர்களுக்கு நடன பயிற்சியையும் லாரன்ஸ் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தன் படங்களிலும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து தன்னம்பிக்கையைத் தூண்டி வருகிறார்.

தற்போது லாரன்சை பின்பற்றி வருகிறார் இசையமைப்பாளர் டி இமான். அதாவது தான் வேலை செய்யும் படங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம் இமான். அதுமட்டுமன்றி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தனது சொந்த பணத்தின் மூலம் கல்வி கொடுத்து வருகிறாராம்.

இவ்வாறு சத்தமே இல்லாமல் இப்படி இமான் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இதனால் நியூயார்க்கில் உள்ள தமிழ் சங்கங்கள் இமானை அழைத்த அங்கே பாராட்டு விழா ஒன்றை நடத்தியுள்ளார். லாரன்ஸின் மறுபிறவியை தற்போது இமான் மாறியுள்ளார்.

சமீபத்தில் இமானின் மனைவி இமான் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்தாலும், இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாலும் பலரும் இவரை விமர்சித்து வந்தனர். தற்போது இந்த விஷயத்தை அறிந்து பலரும் இமானை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Trending News