Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் பாடலை அஜித் படங்களில் நேக்கா சொருகின இசையமைப்பாளர்.. பலே ஆள்தான்
தென்னிந்திய சினிமாவின் பிரபல இசை அமைப்பாளரான ஒருவர் விஜய் படத்தின் பாடலுக்கு இசையமைத்த அதே டியூனை தல அஜித் மற்றும் சூர்யாவின் படங்களுக்கு இடையில் சொருகியிருப்பது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே ஊரடங்கில் இருப்பதால் பல்வேறு விதமான பழைய விஷயங்களை கிளறி பிரபலங்களை வம்புக்கிழுத்து வருகின்றனர் நம்ம நெட்டிசன்கள். அந்த வகையில் தற்போது மாட்டியிருப்பது பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தான்.
மாஸ் படங்களுக்கு இசையமைப்பதற்கு பெயர்போன தேவிஸ்ரீ பிரசாத் விஜய் நடித்த வில்லு, சச்சின், புலி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். வில்லு படத்தின் ஓபனிங் பாடலான ராமா ராமா பாடலில் ஒரு ட்யூன் போட்டிருப்பார் இவர்.
இதே டியூனை தல அஜித் நடிப்பில் உருவான வீரம் படத்தில் வரும் காதல் பாட்டிலும், சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம் படத்தின் ஓபனிங் பாடலிலும் வில்லு படத்தின் டியூனை ஆல்டர்நேட் செய்து சொருகி இருப்பார்.
இதை எப்படியோ கண்டுபிடித்த நெட்டிசன்கள் தொடர்ந்து இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஒரே ட்யூனை பல படங்களுக்கு போடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்கிறது கோலிவுட் வட்டாரம். அந்த வீடியோ லிங்க்
