ரிலீஸ்க்கு முன்னரே வியாபாரத்தை தொடங்கிய மணிரத்னம்.. ராஜமௌலிக்குகே டஃப் கொடுப்பார் போல

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவியத்தை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படம் கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கிறது.

இரண்டு பாகங்களாக வெளி வரும் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் குறித்த ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு சேர்த்து கிட்டத்தட்ட 20 பாடல்கள் வருகிறதாம்.

தற்போது இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களின் ஆடியோ ரைட்ஸையும் பிரபல மியூசிக் நிறுவனமான டி சீரிஸ் கைப்பற்றியுள்ளது. இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் இந்த நிறுவனம் பொன்னியின் செல்வன் திரைப்பட பாடலுக்காக 20 கோடி ரூபாயை வாரிக் கொடுத்துள்ளது.

ஒரு பாடலுக்கு ஒரு கோடி வீதம் என்று இருபது பாடல்களுக்கும் சேர்த்து அவர்கள் 20 கோடி ரூபாயை மொத்தமாக கொடுத்து இதன் உரிமையை வாங்கியுள்ளனர். இது தமிழ்த் திரையுலகில் பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஒரு படத்தின் பாடல்களுக்கான ஆடியோ ரைட்ஸை இவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து ஒரு நிறுவனம் வாங்குவது இதுதான் முதல் முறை. அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரிய வியாபாரமா என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்