அஜித் படங்கள் என்றாலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டம் போடுவார்கள். அவரது பெயரை சொன்னதுமே பயங்கர கோஷம் போட்டுவிடுவார்கள்.

அஜித் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். அவரின் குணங்கள் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

சில அவர் நன்றாக சமைப்பார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம், அனைவரிடமும் சகஜமாக பழகுவார் என சொல்வார்கள்.

அவர் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர். எல்லோரையும் மதிக்கும் பண்பு கொண்டவர். உடனிருப்பவரின் தேவைகளை அறிந்து உடனே உதவி செய்வார்.

பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று தனது தமிழ் மாத இதழில் அஜித்தின் புகைப்படத்தை முன் பக்க அட்டை படமாக போட்டுள்ளார்கள். மேலும் இந்த ஆண்களுக்கான சிறப்பிதழில் அஜித்தை உயர்ந்த உள்ளம் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.