ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆனால் பாடலாசிரியர் வைரமுத்து, சமீபத்தில் தான் கலந்துகொண்ட ஒரு விழாவில் கபாலி தோல்வி படம் என மேடையிலேயே கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.