ரஜினியின் கால்ஷூட்டுக்காக காத்திருக்கும் கோலிவுட் முன்னணி இயக்குனர்கள்..

ரஜினியின் கால்ஷூட்டுக்காக காத்திருக்கும் கோலிவுட் முன்னணி இயக்குனர்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினி திறமையான இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் மெட்ராஸ் இயக்குநர் பா.ரஞ்சித்துடன், கபாலி மற்றும் காலா என இரண்டு படங்களை அவர் முடித்து விட்டார். கபாலி மற்றும் காலா ஆகிய படங்கள் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. மும்பை தாராவியில் வாழ்ந்துவரும் தமிழர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தை, நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். காலாவாக கருப்பு உடையில் ரஜினி மிரட்டியிருந்தார். படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

rajini
rajini

அரசியலுக்கு வரப்போவதாகக் கூறி ரசிகர்களைக் கட்சிப் பணியில் ஈடுபடுத்திய ரஜினி, தமிழகத்தின் பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரசியல் கட்சி பிரமுகர்கள் மட்டுமல்லாது, ஊடகத்துறையினரையும் நேரில் அழைத்து ஆலோசித்தார். இதனால், காலா படத்துக்குப் பின்னர் கட்சிப் பெயரை அறிவித்து தீவிர அரசியல் பணிகளில் ரஜினி ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தாயாரித்து வரும் இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடந்தது. கார்த்திக் சுப்புராஜ் படம் மூலம் ரஜினி படத்துக்கு முதல்முறையாக அனிருத் இசையமைக்கிறார். அதேபோல், இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் தனது போர்ஷனையும் ரஜினி முடித்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்துக்குப் பிறகு ரஜினி அரசியல் பணிகளைக் கவனிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

rajini

ஆனால், அவருக்குக் கதை சொல்லி அவரின் கால்ஷீட்டுக்காக கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் காத்திருக்கின்றனர். இருவரிடமுமே கதை கேட்டுவிட்டு அவர்களைக் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார் ரஜினி. வடசென்னையை மையமாக வைத்து வெற்றிமாறன் சொன்ன கல்ட் சினிமா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அரசியல்ரீதியான கதையும் ரஜினிக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். இதனால், கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு சிறிது இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் படங்களில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது.