Connect with us

Cinemapettai

தளபதி-64ல் இணைந்த மீண்டும் ஒரு பிரபல நடிகை.. செம்ம மாஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி-64ல் இணைந்த மீண்டும் ஒரு பிரபல நடிகை.. செம்ம மாஸ்

தளபதியின் பிகில் திரைப்படம் இது வரை நூறு கோடிகளைத் தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் கதை பெண்களை மையப்படுத்தி மற்றும் விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் இருந்தபோதும் கூட இந்த வசூலை வைத்து பார்க்கும்போது தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி என்று கூறலாம்.

ஆனால் முழு வசூல் விபரம் வந்த பின்பு தான் படத்தின் மொத்த பட்ஜெட் ஏற்றவாறு கலெக்சன் வந்துள்ளதா என்பதை நாம் அறிய முடியும். தற்போது தளபதி விஜயின் 64 வது  படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் தளபதி-64 படத்தை இயக்கி வருகிறார்.  கைதி தமிழ்சினிமாவில் ஒரு மிகச் சிறந்த படம் என்றும் விறுவிறுப்பான கதை களம் என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் தளபதி விஜயுடன் இணைந்து மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி  இணைந்து உள்ளனர். தற்போது இவர்களுடன் சேர்ந்து நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

andrea

andrea

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top