கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழியும் தமிழ் சினிமா.. வெற்றிமாறனை பின்னுக்கு தள்ளிய இயக்குனர்

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் அதிகமாக இந்த கெட்டவார்த்தை கலாச்சாரம் பெருகி வருகிறது. தமிழில் மயிறு என்று சொல்வதை கூட பீப் சவுண்ட் போடுகிறார்கள். ஆனால் அதையே ஆங்கிலத்தில் மிகப்பெரிய கெட்ட வார்த்தை பேசினால் அதை அப்படியே விட்டு விடுகிறார்கள்.

முன்பைவிட சமீபகாலமாக வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை கூசாமல் பயன்படுத்துகின்றனர். இது தமிழ் சினிமா சீரழிவதற்கான அடையாளம். பெரிய பெரிய நடிகர்களும் இயக்குனர்களும் இதை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து தேசிய விருதுகளை பெறும் படங்களை இயக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் நடிகைகள் கூட அதிகமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிக எதார்த்தமாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் இதில் சரணமாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது பலரை வியக்க வைத்தது.

இதைப்போன்று வெற்றிமாறனை மிஞ்சும் அளவுக்கு கடந்த ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸான பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் அதிகமான கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதில் வேறு இந்தப் படம் ஆஸ்கர் அவார்டு வாங்குவதற்காக பார்த்திபன் செதுக்கியிருக்கிறார் என்றெல்லாம் வேறு சொல்லப்படுகிறது.

எப்போதும் தான் செய்யும் விஷயத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என போராடும் பார்த்திபன், இந்தப் படம் முழுவதையும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையில் மிதக்கிறார். இருப்பினும் இந்த படத்தில் கெட்ட வார்த்தைகள் அதிகம் காணப்படுவது சிலரை முகம் சுழிக்க செய்திருக்கிறது.

இப்படி சமூக அக்கறை இல்லாமல் குழந்தைகளும், இளம் தலைமுறைகளும் பார்க்கும் படத்தில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களுக்கு போதிப்பது போல் இந்த படங்கள் இருக்கிறது. குடும்பத்துடன் படத்தை பார்க்க நினைக்கும் சிலருக்கு படங்களில் கெட்டவார்த்தை வருவதால் எரிச்சல் அடைகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களாக பார்க்கப்படும் வெற்றிமாறன் பார்த்திபன் ஆகியோருக்கு என்ன ஆச்சு. ஏன் இப்படி எல்லாம் படத்தில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்