விக்ரமை நம்பியதால் நாலு வருஷம் நாசமா போச்சு.. தூக்கிவிட்ட ஏணியவே பதம் பார்த்த சியான்

Famous Director Trusting Vikram: சினிமாவில் படிப்படியாக முன்னேறி டாப் நடிகராக மாறியவர்தான் விக்ரம். இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு துணையாக இருந்த இயக்குனரை நம்ப வைத்து மோசம் செய்திருக்கிறார். அதுவும் தூக்கிவிட்டு அழகு பார்த்த ஏணியவே காலால் எட்டி உதைத்துள்ளார்.

விக்ரமின் சினிமா கேரியரை திருப்பி போட்ட படம் தான் சேது. இந்த படத்தை இயக்கிய பாலாவின் அசிஸ்டன்ட் டைரக்டராக அமீர் இருந்ததால், அப்போதிலிருந்தே விக்ரமும் அமீரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அமீரை விக்ரம் டார்லிங் என்று தான் கூப்பிடுவார்.

அமீர் இயக்கிய மௌனம் பேசியதே திரைப்படம் தெலுங்கு ரீமேக் படம். இந்த படத்தில் சூர்யாவிற்கு பதில் விக்ரம் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அமீர் மேல் நம்பிக்கை இல்லாமல் கடைசிவரை அந்த படத்திற்கு விக்ரம் ஓகே சொல்லவில்லை.

Also Read: ஒரே படத்தில் 2 ஹீரோக்களுக்கு டப்பிங் செய்த விக்ரம்.. அட! இந்த ஹீரோக்களுக்கு எல்லாம் டப்பிங் பேசியிருக்காரா

4 வருஷத்தை வீணடித்த அமீர்

ஓகே சொல்வார் என்ற நம்பிக்கையில் அமீரும் காத்திருந்தார். ஆனால் விக்ரமின் ஆரம்ப காலகட்டத்தில் அமீர் அவரை ஒரு நெருங்கிய நண்பராக பார்த்ததால், அவருக்கு அசிஸ்டன்ட் ஆக கூட இருந்துள்ளார். அது மட்டுமல்ல விக்ரமின் மேனேஜர் மாதிரி, அவருக்காகவே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்ப்பார்.

ஒரு சில வருடம் இப்படியே போனது. ஆனால் அமீருக்கு மட்டும் ஓகே சொல்லவில்லை. மேலும் மௌனம் பேசியதே தெலுங்கு ரீமேக் என்பதால் அமீருக்கு சான்ஸ் கொடுக்க அவர் முடியாது என்று ஒரு கட்டத்தில் அதிரடியாக சொல்லிவிட்டார். இப்போதுதான் விக்ரமின் சுயரூபம் அமீருக்கு தெரிய வந்தது.

இந்த படத்தில் விக்ரம் வேண்டாம் என்று தூக்கிவிட்டு அவருக்கு பதில் சூர்யாவை அமீர் நடிக்க வைத்தார். அப்போ விக்ரம் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட அமீர், இப்ப வரை அவரிடம் ஒரு கதை கூட சொல்ல விருப்பமில்லை. அமீர் பெரிய இயக்குனர் ஆன போது, படம் பண்ணலாமா என்று விக்ரம் கேட்டும் அமீர் கொஞ்சம் கூட அவரை மதிக்கவில்லை. ஏனென்றால் விக்ரமை நம்பியே நாலு வருஷத்தை அமீர் வீணடித்து விட்டார்.

Also Read: மற்ற நடிகர்களுக்காக சப்போர்ட் பண்ணிய விக்ரம்.. அப்பாஸுக்கும் இவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்