fbpx
Connect with us

Cinemapettai

விஜய் என் மேல் வைத்த நம்பிக்கையை ஏமாற்றி விட்டேன்.. புலம்பிய பிரபல இயக்குனர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் என் மேல் வைத்த நம்பிக்கையை ஏமாற்றி விட்டேன்.. புலம்பிய பிரபல இயக்குனர்

தளபதி விஜய் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியையே செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் ரசிகர்களையும் தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் ஏன் வட மாநிலங்களிலும் விஜய் படம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் வந்த பிகில் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வட மாநிலங்களில் செம ஓட்டம் ஓடியது. இதனால் விஜய்யின் இனி வரும் படங்களை பேன் இந்தியா படமாக வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இருந்தாலும் ஒரு காலகட்டங்களில் விஜய் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார் என்பது மறுக்க முடியாது. தளபதி விஜய் கில்லி, போக்கிரி என வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த போது அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஒரு பெரிய தோல்வி படத்தை கொடுத்தவர் தான் பரதன்.

அழகிய தமிழ்மகன் படம் சொதப்பியதால் அதன் பிறகு வெளியான விஜய் படங்கள் பெரிதும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் தோல்வி இயக்குனர் என்பதை மறந்து துப்பாக்கி, கத்தி, தெறி என ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

அப்படி உருவான படம்தான் பைரவா. விஜய்யின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றதை விட பைரவா படம் சுமாராகத்தான் ஓடியது. இதனால் விஜய்க்கு ஒரு நல்ல ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லையே என மனம் வருந்துவதாக இயக்குனர் பரதன் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

ஆனால் விஜய்யின் வெற்றி படங்களான கில்லி மதுர போன்ற படங்களுக்கு வசனம் எழுதியது பரதன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top