Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-kumar-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜீத்துக்கு கதை சொல்லிய ரஜினியின் கேங்ஸ்டர் படம் டைரக்டர்.. செம மாஸ்!

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

இது ஒரு புறமிருக்க தல அஜித் ஊரடங்கு சமயத்தில் சுதா கொங்கரா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

தற்போது தல அஜீத்துக்கு ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த ஒரு இளம் இயக்குனர் கதை கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவர் வேறு யாருமல்ல. கார்த்திக் சுப்புராஜ் தான். ரஜினியை வைத்து பேட்ட என்ற ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார்.

இதனை அடுத்து தல அஜித்துடன் ஒரு கதையைச் சொல்லி உள்ளாராம். மேலும் இந்த கதை தல அஜித்துக்கு பிடித்துப்போக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

தல அஜீத்தும் கேங்க்ஸ்டர் படம் செய்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் ஒரு தரமான படத்தை கொடுக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

ajith-kumar-valimai

ajith-kumar-valimai

Continue Reading
To Top