fbpx
Connect with us

Cinemapettai

கொடுத்த வாக்கை காப்பாற்றிய தல அஜித்- பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி

கொடுத்த வாக்கை காப்பாற்றிய தல அஜித்- பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் அஜித் ரசிகர்கள் தான். அந்த வகையில் அஜித் நடித்த பூவேல்லாம் உன்வாசம், ராஜா என இரண்டு படங்களை இயக்கியவர் எழில்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘அஜித்துடன் பெண்ணின் மனதை தொட்டு படத்திலேயே வேலை செய்ய வேண்டியது, ஆனால், அந்த படத்திற்கு மிகவும் அதிக சம்பளம் கேட்டார் அஜித்.

“சார் கண்டிப்பா வாலி படம் வந்தால், என் மார்க்கெட் உயரும் அதனால் தான் இவ்வளவு சம்பளம் கேட்கிறேன்” என தன்னம்பிக்கையுடன் கேட்டார்.

பிறகு பூவேல்லாம் உன்வாசம் படத்தில் இணைந்து பாணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது சிவாஜி அவர்களின் மரணம் எங்களுக்கு தெரிய வந்தது. நாங்கள் தமிழகத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தோம்.

படப்பிடிப்பில் எல்லோரும் ரெடியாக இருக்க, அஜித் “நான் கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும், போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது” என கூறினார், ஒரு நாளில் எப்படி சார் முடியும் என்றேன்.

ஆனால், அஜித் தான் கூறிய வார்த்தையை பொய்யாக்காமல் இறுதி சடங்கில் கலந்துக்கொண்டு அடுத்த நாளே படப்பிடிப்பிற்கும் திரும்பிவிட்டார்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top