Connect with us

Cinemapettai

shankar-director

Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..

தமிழ் சினிமாவின் இன்றைய பிரமாண்ட இயக்குனர் என்றால் அந்த நான்கெழுத்து இயக்குநர் சங்கர் தான். அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.

இதற்கு காரணம் என்ன சிறிது அலசிப் பார்த்தால், அவரை அறிமுகப்படுத்திய முதல் தயாரிப்பாளர் இன்று எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அதன்பிறகு வந்த படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை விட்டு ஓடிவிட்டனர். ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் இன்று வீடு வாசல் இழந்து தவிக்கிறார். நட்பு பட தயாரிப்பாளர் உயிருடன் இருக்கிறாரா? அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

சங்கர் கடைசியாக இயக்கிய திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம். ஆனால் அந்த தயாரிப்பாளரோ போதும் போதும் இனிமே படங்களை தயாரிக்க வேண்டாம் என முடிவு எடுத்துவிட்டார். இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் படத்தையும் நிறுத்திவிட்டார்.

தமிழ் படங்களில் எதற்கு இந்த பிரம்மாண்டம்? தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 150 கோடி தான் உச்சகட்ட வசூல் சாதனை. சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் இது தெரியும். அதையும் மீறி படம் தயாரித்தார் இப்பொழுது மொத்த சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடுவார். இது தெரிந்தே இவரின் படங்களை தயாரிக்கிறார்கள்.

அதிகம் லாபம் எடுக்கலாம் என்ன சில தயாரிப்பாளர்கள் எண்ணி தெருவுக்கு வருவது தான் மிச்சம். சமீபகாலமாக அந்த பிரம்மாண்ட இயக்குனரை ஒரு தயாரிப்பாளர் வசைபாடி உள்ளார். இன்னும் எத்தனை பேரை தான் தெருவுக்கு கொண்டு வந்து விடுவீர்கள். நீங்கள் மட்டும் நல்லா இருந்தால் போதுமா உங்களை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் நல்லா இருக்க வேண்டாமா என மேடையிலேயே கேள்வி கேட்டார்.

குறைந்த முதலீட்டிலேயே ஒரு பிரமாதமான படத்தைத் தரமுடியும். கதைதான் இங்கே பிரம்மாண்டம் அதை விட்டுவிட்டு பணம்தான் பிரம்மாண்டம் என்றால் தெருவுக்குத் தான் வரவேண்டும். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கதை தான் ஹீரோ. ஒரு சிறிய நல்ல கதையை வைத்து குறைந்த முதலீட்டில் படம் எடுத்து தயாரிப்பாளருக்கு லாபம் தருவாரா இல்லை மற்றவரின் பணத்தில் வடை சுடுவாரா?.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top