தமிழ் சினிமாவில் tamilrockers,tamilgun பேரை கேட்டாலே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கோபப்படுவார்கள் ,தமிழ் சினிமா நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது பைரஸி இணையதளத்தை ஒழிக்கவேண்டும் என்றே,இதனை தயாரிப்பாளர்கள் சங்கம் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள்.

C2S

ஏன் என்றால் இவர்கள் தமிழ் சினிமாவில் எந்த படம் வந்தாலும் அதாவது இளம் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் அனைவரின் படமும் திரைக்கு வந்த உடனே அல்லது அடுத்த நாள் இவர்களின் இணையதளத்திற்கு வந்துவிடும் இதை இந்த இணையதளம் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

chennai-2-singapore

கடந்த வாரம் வெளிவந்த சென்னை 2 சிங்கப்பூர் படத்தை இயக்கி இருப்பவர் புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவர்கள் இருவரும் தற்பொழுது  தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இணையதளங்களுக்கு மிகப்பெரிய கோரிக்கை ஒன்றை வைத்து வீடியோ ஒன்றினை எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோவில் இவர் கூறியதாவது இந்த படத்தில் பேமஸான ஸ்டார்கள் யாரும் இல்லை, இருப்பினும் படத்திற்காக 8 கோடி ருபாய் செலவு செய்து 6 வருடமாக உழைத்துள்ளோம், இதனால் தயவு செய்து எங்களது படத்தை உடனே உங்களது இணையத்தில் வெளியிடாதிர்கள்  30 நாட்கள் கழித்து வெளியிடுங்கள் என கூறியுள்ளனர்.