fbpx
Connect with us

Cinemapettai

மலையையே தூக்கி வைத்தாலும் தாங்குவார் விஜய்- பிரபல இயக்குனர் புகழாரம்

மலையையே தூக்கி வைத்தாலும் தாங்குவார் விஜய்- பிரபல இயக்குனர் புகழாரம்

vijay1தமிழ் புத்தாண்டுக்கு வெளிவந்த விஜய்யின் தெறி படம் பாக்ஸ்வசூலில் சாதனை புரிந்து வருகிறது.6 நாட்களில் ரூ.100 கோடி லிஸ்டில் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து விட்டார் இளையதளபதி விஜய்.

இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் ஆரம்பகாலகட்டத்தில் சில தோல்வி படங்களை தந்திருந்தார். அப்போது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத்தந்த படம் விக்ரமனின் பூவே உனக்காக. இப்படத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமானபோது, மூத்த நடிகர் ஒருவர் இந்தளவு கனமுள்ள கதையை குருவி தலையில் பனங்காயை வைப்பது போல் இவர் தாங்குவாரா என்று கேட்டுள்ளனர்.

ஒருநாள் படப்பிடிப்பு முடிந்தபின்பு விக்ரமன், பரங்கிமலையையே வைத்தாலும் தாங்கும் அளவுக்கு விஜய் திறமையான நடிகர் என்று கூறி அவரின் வாயை அடைத்தாராம்.இதை விக்ரமன் சமீபத்தில் நடந்த இசைவெளியீட்டு விழா ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top