சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடிக்கும் படம் பத்மாவதி.

இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் மலைப்பகுதி ஒன்றில் நடந்து வந்தது. இந்நிலையில் அங்குள்ள சில அமைப்புகள் இப்படத்தில் தங்களது ராணி பத்மாவதியை தவறாக சித்தரிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்கள் வலுத்து கொண்டிருந்த போது, ஒருகட்டத்தில் போராட்டக்காரர்கள் சஞ்சய் லீலா பன்சாலியை கீழே தள்ளி அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அங்கு படப்பிடிப்பு முற்றிலும் முடங்கியது. இதையடுத்து போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் அங்கு படப்பிடிப்பு நடத்த மாட்டோம், வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்கிறோம் என பன்சாலி தெரிவித்துள்ளார்.