tamilrockers
tamilrockers

சினிமா இயக்குனர்கள் பலர் டிஜிட்டலின் அடுத்த பரிமாணமான வெப் சீரிஸில் களமிறங்கி வருகின்றனர்.

தமிழ் சினிமா படிப்படியாக வேறு கோணத்திற்கு பயணமாகி கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய, கோலிவுட் ட்ரெண்டாக மாறி இருக்கும் வெப் சீரிஸை பல இயக்குனர்கள் கையில் எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். மாரி படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் அஸ் ஐ எம் சபரிங் ப்ரம் காதல் என்ற பெயரில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற வெப் சீரிஸ் தான் தமிழின் முதற்முயற்சியாக அமைந்தது. 10 எபிசோட்கள் வெளியிடப்பட்ட இதன் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இந்தியில் மாதவன் நடிப்பில் வெளியான ‘பிரீத்’ என்ற வெப் சீரிஸிற்கு அதிக ரீச் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, பிரபல இயக்குனர்கள் பலர் வெப் சீரிஸை இயக்கி வருகின்றனர். அப்படங்கள் குறித்த குட்டி டீடெய்ல்ஸ் உங்களுக்காக!

Weekend-Machan2

இயக்குநர் கௌதம் மேனன் ‘வீக் எண்ட் மச்சான்’ என்னும் வெப் சீரியஸை இயக்கி வருகிறார். நண்பர்கள் புகழ் பாட இருக்கும் இதை அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டென்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முகவரி, ஏமாலி ஆகிய படங்களின் இயக்குனர் வி.இஸட்.துரை. இவர் இந்தியில் வெப் சீரிஸை இயக்கி வருகிறார். இதில், அருவி படத்தில் நடித்த சுவேதா சேகர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார்.

பெண் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் நந்தினி. இவர் திருதிரு துறுதுறு படத்திற்கு பிறகு சினிமாவில் பெரிய ப்ரேக் எடுத்து இருந்தார். மீண்டும் வெப் சீரிஸின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார்.

இயக்குனர் வசந்தபாலன் மண் சார்ந்து உருவாக இருக்கும் ஒரு வெப் சீரிஸை இயக்க இருக்கிறார். அதை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாக்கப்படும் இந்த சீரிஸ் ரசிகர்களிடம் அதிக ரீச்சை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.