Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் இந்த மெஹா ஹிட் இயக்குனருடன் தான் அதிகாரபூர்வ அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி நடிகர் இடத்தை பிடித்தவர், இவர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் தற்போது வெளிவந்திருக்கும் படம் சீமா ராஜா, இந்த திரைப்படம் மக்களிடம் கலவை விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ஓரளவு ஆகியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

sivakarthikeyan
மேலும் சிவகார்த்திகேயன் சீமா ராஜா படத்திற்கு அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் ரவிக்குமார் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கு அடுத்ததாக மேலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
விஷாலை வைத்து இரும்புத்திரை என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் மித்ரன்இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார் இந்த தகவலை இயக்குனர் மித்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்தார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த புதிய பாடத்தை 24am studios தான் தயாரிக்க இருக்கிறது மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்த படத்திலும் ஒரு சமூக கருத்தை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
