Tamil Cinema News | சினிமா செய்திகள்
லேடி சூப்பர் ஸ்டாரை மிரள விட்ட பிரபல இயக்குனர்.. ஒரே ட்விட்டால் ஆடிப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டும் ஹீரோயின் தான் நயன்தாரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இந்தப் படத்தின் டிரைலர் அண்மையில் ரிலீசாகி ரசிகர்களால் தெறிக்க விடப்பட்டது. அதே சமயத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
எனவே இந்த போஸ்டரை பார்த்த பிரபல இயக்குனர் ஒருவர் மாசான வாழ்த்து செய்தியை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் ஆடிப் போய் விட்டனர்.
ஏனெனில் தல அஜித்தின் சூப்பர் ஹிட் படமான என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்ற “அத்தாறு அத்தாறு..” என்ற பாடலில் இடம்பெற்ற ‘எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்..’ என்ற வரிகளைச் சுட்டிக்காட்டி இயக்குனர்விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கும் நெற்றிக்கண் படத்திற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.
எனவே இந்த வாழ்த்து செய்தியில் பார்த்த ரசிகர்கள், கௌதம் வாசுதேவ் மேனன்,கொஞ்சம் வித்தியாசமாக தல அஜித்தின் பாடலை குறிப்பிட்டு லேடி சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
அது மட்டுமில்லாமல், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தைத் தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் வெளியான இரண்டாவது படம் ‘நெற்றிக்கண்’ என்பதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களை இன்னும் எகிற வைத்துள்ளது.

nayanthara-twit-reply
