'மெர்சல்' விஜயை விமர்சித்து ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் பிரபல இயக்குனர்.!! - Cinemapettai
Connect with us

Cinemapettai

‘மெர்சல்’ விஜயை விமர்சித்து ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் பிரபல இயக்குனர்.!!

mersal movie review

News | செய்திகள்

‘மெர்சல்’ விஜயை விமர்சித்து ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் பிரபல இயக்குனர்.!!

தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தனதாக்கியிருக்கும் படம் ‘மெர்சல்’. படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ ரிலீஸ் முதலே பரபரப்பு பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.

‘ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம்’ என்ற விவாதத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கியதென்றால், அதன் பின் வெளிவந்த டீஸரிலோ, ”ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்” என்ற அழுத்தமான வசனமோ அரசியல் அரங்கில் கடும் அனலைக் கிளப்பியது.

mersal-box

விலங்குகள் நல அமைப்பிடம் அனுமதி வாங்காதது, படத் தலைப்பு பிரச்னை என ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை உடைத்தெறிந்துதான் திரையரங்குகளில் வெளியானது ‘மெர்சல்’ திரைப்படம்.

இப்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும் காட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசின் திட்டங்களைக் கடுமையாகச் சாடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

mersal movie review

mersal vijay

ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, இலவச மருத்துவம், மெடிக்கல் எரர் எனப்படும் மருத்துவத் தவறுகள் எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசுகிறது மெர்சல் திரைப்படம். இந்தக் கருத்துகளுக்கு பி.ஜே.பி. தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தளபதி விஜயின் மெர்சல் பிரச்னையை பற்றி தான் உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, மெர்சலில் ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகள் நீக்கத்திற்கு எதிராக ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

mersal

மேலும் பிரச்சனையை உண்டாக்கிய பிரபல கட்சியின் மீது தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அரசியலில் நுழைய தான் இவ்வாறாக கேவலமான விசயத்தை செய்து இருக்கிறார் என்பது போலவிமர்சித்துள்ளார்.

என்ன சார் நீங்க இன்னும் துப்பாக்கி ரிலிஸ் ஆனதுல உங்க படம் ஓடாதத நெனச்சி அழுதுட்டு இருக்கிங்களா.

இவருடைய கருத்து தளபதி ரசிகர்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது, இதனால் ரசிகர்கள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top