Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் மாதிரி தான் ஹிப்ஹாப் தமிழா.. முன்னணி இயக்குனரின் பேச்சால் கடுப்பில் ரசிகர்கள்
தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. முதலில் தன்னிச்சையாக இசையமைத்து யூடியூபில் வீடியோ போட்டு வந்த ஆதியை சுந்தர் சி ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.
அறிமுக படத்திலேயே தனது இசைத் திறமையை வெளிப்படுத்திய ஆதியை தொடர்ந்து தனது படங்களில் இசை அமைக்க பணி அமர்த்தினார் சுந்தர் சி. அது காலப்போக்கில் சுந்தர்சி குடும்பத்தில் ஆதி ஒரு அங்கமாக அடித்தளமாக அமைந்தது. இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியை வைத்து மீசையமுறுக்கு என்ற படத்தை தயாரித்தார் சுந்தர் சி. அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் என இரண்டு படங்களையும் தயாரித்தார்.
ஆதி நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் வெளிவந்த நான் சிரித்தால் படமும் வசூல் ரீதியாக வெற்றி வெற்றி பெற்றது. இதை சக்சஸ் பார்ட்டி கொண்டாடினார்கள். அதில் முன்னணி இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கேஎஸ் ரவிக்குமார் ஆதியை தளபதி விஜய்யுடன் ஒப்பிட்டு பேசியது அவரது ரசிகர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆதி, விஜய் மாதிரி தான் எனவும், விஜய்யின் நடிப்பும் ஆதியின் நடிப்பும் வெவ்வேறாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொள்ளும் விஷயங்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறது என ஒப்பிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் 27 வருடமாக சினிமாவில் இருக்கும் தளபதி எங்கே, மூன்று படங்கள் நடித்த ஆதி எங்கே, ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
