ajith-vijayரஜினி, கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வரும் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித். இவர்களை பற்றி எது பேசினாலும், பார்த்து தான் பேச வேண்டும்.ஏனெனில் சமூக வலைத்தளங்களில் இவர்களுடைய ரசிகர்கள் திட்டி தீர்த்து விடுவார்கள். இந்நிலையில் பிரபல இயக்குனர் செல்வமணி சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தார்.

அங்கு அவர் பேசுகையில் ‘இன்று மதியம் நான் சாப்பிடாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன், அதற்கு வீட்டில் ஏன் இப்படி சாப்பிடாமல் கூட செல்கிறீர்கள், விஜய் ஏதும் வருகிறாரா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன்.பிறகு அஜித் வராரா? என்றார்கள், இவர்கள் எல்லோரையும் விட பெரிய ஆள் ஐ.ஏ.எஸ் சகாயம் வருகிறார், என கூறினேன்’ என்று செல்வமணி பேசினார்.