Sports | விளையாட்டு
இணையதளத்தில் கொதித்தெழுந்த விராட் கோலி, அஸ்வின், தவான்.. திட்டமிட்டு கொல்லப்பட்ட பிரியங்கா
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரான பிரியங்கா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைக்கை திட்டம்போட்டு பஞ்சர் செய்து, உதவுவது போன்று அப்பெண்ணை 20 கிலோமீட்டர் தூரத்தில் தூக்கி சென்று கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு உடலை எரித்துள்ளனர்.
இதற்காக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, அஸ்வின், தவான் ஆகிய வீரர்கள் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஷிகர் தவான்
பியங்கா ரெட்டியின் செய்தி கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
விராட் கோலி
ஹைதராபாத்தில் நடந்தது முற்றிலும் வெட்கக்கேடானது. ஒரு சமூகமாக நாம் பொறுப்பேற்று இந்த மனிதாபிமானமற்ற துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது.
ரவிசந்திரன் அஸ்வின்
பியங்கா ரெட்டி போன்ற நிகழ்வுகளுக்கு வெட்கக்கேடான ட்வீட்களைப் போடுவதில் வருத்தப்படுகிறேன். இது ஒரு கொடூரமான செயல், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
This is an extremely painful news of Priyanka Reddy, shocked and disgusted on hearing this. The offenders must be punished! My deepest condolences to her family and friends 🙏 #RIPPriyankReddy #JusticeForPriyankaReddyُ
— Shikhar Dhawan (@SDhawan25) November 30, 2019
What happened in Hyderabad is absolutely shameful.
It's high time we as a society take charge and put an end to these inhumane tragedies.— Virat Kohli (@imVkohli) November 30, 2019
I regret putting #shame tweets for incidences like that of #PriyankaReddy The girl surely dint deserve this and I feel nothing but pain for her loved ones. It’s a cringeful act and the criminals must be dealt with like never before in order to stop such crimes in the future.
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 30, 2019
