புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

ஓய்வை அறிவித்த பிரபல CSK வீரர்.. திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் தோனி!

சமூக ஊடகங்களில் இன்று பேசுபொருளாக இருப்பது மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டருமான டுவைன் பிராவோ கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளதுதான்.

அதென்னவோ இந்த உலகில் கால்பந்து விளையாட்டு மாதிரி கிரிக்கெட்டிற்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கட்டுக்கடங்காத ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் களத்தில் 11 வீரர்கள் கொண்ட அணியில் தானும் ஒருவராய் இருந்து அணியில் வெற்றி தோல்வியில் பங்கெடுப்பது என்பது எத்தனை பெரிய பாக்கியம்.

அது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. அதற்கென கனவு காணுவதும், அதை அதைய விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால்தான் தேடுதல் ஒரு நாள் நிறைவேறும். அப்படி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்வேன் ஜேம்ஸ் ஜோன் என்ற டுவைன் பிராவோ. இவர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு, 2004 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடி தேசிய அணியிலும் இடம் பிடித்து அசத்தினார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளராக திகழ்ந்த இவர், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியில் இணைந்து விளையாடினார். இவர், கிரிக்கெட்டில், 40 டெஸ்டுகளில் விளையாடி 2200 ரன்னும், 86 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2968 ரன்களும், 199 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐந்து விக்கெட்டுகளை 2 முறை டெஸ்டிலும், ஒரு நாள் தொடரில் 1 முறையும் வீழ்த்தியுள்ளார்.

வேகமாகப் பந்து வீசி எதிரணி வீரர்களைத் திறனடிப்பதில் வல்லவரா இவர். இவர், அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த திடீர் முடிவு ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வை அறிவித்தாலும் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார். அதன்பின், அங்கிருந்து விலகி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலலோசகராக இணைந்து பணியாற்றி வருகிறார். இதை சென்னை கிங்ஸ் அணி நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து கவுரவித்தது.

இந்த நிலையில், அனைத்துவித கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வை பிராவோ அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”இந்த விளையாட்டு எனக்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறது. இதிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். இந்த 21 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. தொடர்ந்து விளையாட ஆசைப்பட்டாலும், உடலில் வலி அதற்கு என்னை விடவில்லை. அதனால் ஓய்வை அறிப்பதாக” தெரிவித்துள்ளார்.

பவுலிங், பேட்டிங் என தன் மொத்த திறமையையும் மைதானத்தில் காட்டி, எதிரணி வீரங்களை திணறவைத்த டுவைன் பிராவோ தற்போது அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்ந்து கிரிக்கெட்டில் தனது பங்களிப்பை செலுத்திக் கொண்டிருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News