கடந்த ஆண்டு வெளியான ‘ஓகே கண்மணி’ வெற்றி படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8ஆம் தேதி முதல் ஊட்டியில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  கண்ணீரில் மிதந்த ரோபோ ஷங்கரின் மகள்! மனைவி அழுகை

எப்.எம் வானொலியில் ஜாக்கியாக இருந்து பின்னர் கோலிவுட் திரையுலகில் ‘தீயா வேலை செய்யணும், இது என்ன மாயம், யட்சன், நானும் ரெளடிதான்’ உள்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்த ஆர்ஜே பாலாஜி, மணிரத்னம் படத்தில் முதல்முறையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதிகம் படித்தவை:  இந்த படமெல்லாம் வருமா? வராதா? என்ற நிலைக்கு சென்ற படங்கள்- ஸ்பெஷல்

இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘மணிரத்னம் படத்தை பார்த்துதான் வளர்ந்தேன். இப்போது அவருடைய படத்திலேயே நடிப்பது பெரும் பாக்கியம். என்னுடைய கனவு நனவாகியது’ என்று பதிவு செய்துள்ளார்