Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரட்டை அர்த்தத்தில் பேசுவதால் பட வாய்ப்பை இழந்த பிரபல காமெடியன்.. அவமானப்படுத்திய இயக்குனர்!
தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு கதாநாயகன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதை அளவிற்கு காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
ஏனென்றால் அவர்களுடைய கதாபாத்திரம் படத்திற்கு வலுவாக இருந்தால்தான் படம் சுவாரசியமாக இருக்கும். எனவே இரட்டை அடுத்த நகைச்சுவை நடிகரான வெண்ணிற ஆடை மூர்த்தி, வழக்கறிஞராக இருந்தாலும் சினிமாவை நுழைவதற்கு பல போராட்டங்களை சந்தித்துள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கடந்த 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற படத்தில் நடிப்பதற்காக, பிரபல இயக்குனர் ஸ்ரீதரை சந்திக்கச் சென்றுள்ளார் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. அப்போது ஸ்ரீதர், ‘உங்களுக்கு காமெடியனுக்குரிய லுக்கே இல்லை’ என்று நிராகரித்தாராம்.

moorthy-cinemapettai
ஏனென்றால் பழம்பெரும் காமெடி நடிகர் சந்திரபாபு, நாகேஷ் ஆகியோர் திரையில் வரும் போதே ரசிகர்கள் சிரிக்க தொடங்கிவிடுகின்றனர். காரணம் அவர்களுடைய லுக் அந்த மாதிரி இருக்கும் என்று ஸ்ரீதர் விளக்கமளித்துள்ளார். அதன்பின்பு வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்ரீதரிடம்,

sridhar-cinemapettai
‘அழகால் அதிஷ்டத்தை இழந்தேன்’ என்று நினைத்துக் கொள்கிறேன் என தைரியமாக பதில் அளித்ததால், ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன் பின்பு இவர் தமிழ் சினிமாவில் வலுவாக காலூன்றி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
