fbpx
Connect with us

Cinemapettai

தளபதி விஜய் வெளியில் தான் இப்படி.. உள்ளுக்குள்ள பயம் நிறைய இருக்கு.. உண்மையை உளறிய பிரபல நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய் வெளியில் தான் இப்படி.. உள்ளுக்குள்ள பயம் நிறைய இருக்கு.. உண்மையை உளறிய பிரபல நடிகர்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தற்போது மிகப் பெரிய மார்க்கெட் கொண்டவர் தளபதி விஜய். இவரது படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்து வருவதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இவரது படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

ஆனால் இப்படிப்பட்ட நடிகரை காமெடி நடிகர் ஒருவர் விஜய் வெளியே தான் இப்படி, உள்ளுக்குள் மிகவும் பயந்தவர் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்மாமன் என்றாலே கவுண்டமணிக்கு பிறகு ஞாபகத்துக்கு வருவது தம்பி ராமையா தான். அந்த அளவு சமீபகாலமாக வரும் திரைப்படங்களில் அனைத்து ஹீரோக்களுக்கும் தாய்மாமன் வேடத்தில் நடித்து வருகிறார்.

அவர் தளபதி விஜய்யுடன் புலி படத்தில் நடந்த சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது புலி படத்தின் ஷூட்டிங்கின்போது காலை ஐந்து மணிக்கே எழுந்து தளபதி விஜய் அவர்கள் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜாக்கிங் செல்வார் எனவும், ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவராகவும் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தன்னை நம்பும் ரசிகர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என ஒவ்வொரு நாளும் தளபதி விஜய் அவர்கள் பயப்படுவதாக தம்பி ராமையா கூறிய விஷயம் தளபதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் ஒரு குட்டி கதை பாடல் இன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top