தமிழ் சினிமாவில் வாழ்ந்த நடிகர்களை வீழ்ந்த நடிகர்கள் என்றே சொல்லலாம். கொஞ்சம் பிரபலமான நடிகர்கள் பலரே தற்போது என்ன நிலையில் உள்ளனர் என்று தெரியாத நிலை உள்ளது.

அதிலும் துணை நடிகர்களாக சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் நிலை இன்னும் மோசம். பலருக்கு சரியான ஊதியம் கூட கிடைக்காத நிலையில் சிரமப்பபடுவார்கள்.

அப்படி ஒருவர் தான் காமெடி நடிகராக அறியப்பட்ட குள்ளமணி. கரகாட்டக்காரன் படத்தில் நான் வியாபாரிங்க என்று வருவாரே அவர் தான். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடித்து வந்த இவர் 500 படங்கள் வரை நடித்துள்ளார்.

ரஜினி, கமல் உட்பட நடிகர்களின் படங்களிலும் குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார். பல படங்களில் இவருக்கு சேர வேண்டிய சம்பளம் ஒழுங்காக கிடைத்திருந்தாலே கொஞ்சம் நன்றாகவே வாழ்ந்திருக்கலாம் என்கின்றனர் உடனிருந்தவர்கள்.

கடந்த 2013ம் ஆண்டு கிட்னி பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனாதை போல இறந்து கிடந்தாராம். இவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் சிலர் கூட எட்டிப்பார்க்கவில்லை என்கின்றனர். இவருக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

5 படங்களிலேயே கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு வாழும் அதே சினிமாவில் தான் 500 படங்கள் நடித்தும் கடைசிவரை சிரமப்பட்டு இறப்பவர்களும் இருப்பது தான் கொடுமை!