Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தூத்துக்குடி சம்பவத்தால் சர்ச்சையில் சிக்கிய திரையுலக பிரபலங்கலள்…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் நேற்று 9-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது தமிழகம் மட்டுமல்லாது, தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் வெடித்துள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் அரசு சார்பில் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கருணை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரசின் நிவாரணத்தை விட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே முக்கியம் எனக் கூறி போராட்டக்களம் சூடுபிடித்துள்ளது. இதில், காயமடைந்தவர்களை வைகோ, கே.பாலகிருஷ்ணண் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இன்று, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். அதேபோல், கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்குச் செல்ல இருந்ததை ரத்து செய்துவிட்டு ஸ்டாலினும் தூத்துக்குடி சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தநிலையில், இன்று போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சமூக வலைதளங்களிலும் காவல்துறையின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஸ்டாலின், விஜயகாந்த், கமல் முதல் தேசிய அளவில் ராகுல்காந்தி வரை பலரும் தூத்துக்குடி துப்பாக்க்சிச் சூடு அரச பயங்கரவாதம் என விமர்சித்து வருகின்றனர். அதேபோல், திரையுலகைச் சேர்ந்த பலரும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஆர்.ஜே.பாலாஜி, கஸ்தூரி, ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் துப்பாக்கிச் சூடுக்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ஆனால், ஐபிஎல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றதும், இந்தநிலை மாறியது. சென்னை அணி வெற்றிபெற்றதைக் கொண்டாடும் வகையில், அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், ஆர்.ஜே.பாலஜி, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் புகுந்துவிட்ட பொருளில் பிரிஞ்ச் எலமெண்ட்ஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது நெட்டிசன்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. தொடர் எதிர்ப்பால், சென்னை அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டிருந்ததை இயக்குநர் ஷங்கர் நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top