Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? ஆச்சர்யம் ஆனால் உண்மை
தமிழ் சினிமாவில் அஜித்தின் விஸ்வரூப வளர்ச்சி பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
Published on

பிரேம புஸ்தகம் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், அந்தப் படம் சுமாரான வெற்றியை மட்டும் பெற்று இருந்தாலும், அதன்பின் அஜித்தின் விஸ்வரூப வளர்ச்சி பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி கூறுவது;
“என் மகனும் அஜித்தும் ஆந்திராவில் ஒரே பள்ளியில் படித்தனர். அப்பொழுது இருந்தே அவர்கள் இருவரும் நண்பர்கள். அஜித் சினிமா வாய்ப்புகள் தேடும்போது, விளம்பரப் படங்களில் நடிக்கும் பொழுதும் என் மகனின் ஆடை அணிந்து தான் செல்வார்.
ஏனென்றால் என் மகனின் ஆடையை இராசியாக நினைத்தார். பிரேம புஸ்தகம் படத்தில் நான்தான் அஜித்தை அறிமுகப்படுத்தினேன். அதன் பின் அவருடைய உழைப்பில் கிடைத்த வெற்றிதான் இந்த வளர்ச்சி என்று கூறினார்.
