Sports | விளையாட்டு
கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லும் அதிவேக பந்து வீச்சாளர்.. திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலகக்கோப்பை முடிந்த பின் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வு பற்றி ஆலோசித்து வருகையில் திடீரென ஒரு முன்னணி பந்துவீச்சாளர் தனது ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடி வந்த மலிங்கா திடீரென ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்
மலிங்கா 335 விக்கெட்டுகள் இதுவரையில் இலங்கைக்காக எடுத்துள்ளார். உலகக் கோப்பையில் இதுவரை 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமை இவருக்கு மட்டுமே உள்ளது. தற்பொழுது நடக்க இருக்கும் பங்களாதேஷ் அணிக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தான் அவர்க்கு கடைசி போட்டி என தெரிவித்துள்ளனர்.
