Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிடைச்சது சூப்பர் சான்ஸ்.. பிரபல ஹீரோவின் மகனுக்கு ஜோடியாக பாலிவுட் போகும் நடிகை!
பிரபல தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, பிரபல ஹீரோவின் மகனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஈஷா ரெப்பா “அந்தகா முண்டு ஆ தர்வதா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார். ஓய் என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர். அதன் பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார்.
அங்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகஉ ள்ளது.
இவருக்கு இப்போது தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் ஈஷா.
இதை தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜ் சிங் சவுத்ரி இயக்குகிறார். இந்தப் படத்தில் ராஜஸ்தான் பெண்ணாக, ஈஷா ரெப்பா நடிக்கிறார். மும்பையில் நடந்த ஆடிஷனில் இவரது நடிப்பு நன்றாக இருந்ததால் இவரை தேர்வு செய்திருக்கிறது படக்குழு.
