Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலிவுட்டையும் விட்டு வைக்காத காலா ஜூரம். ட்வீட் போட்ட கான் நடிகர்
பாலிவுட்டையும் விட்டு வைக்காத காலா:
ரஜினி ரசிகனாக காலாவை பார்க்க காத்திருக்க முடியவில்லை என பாலிவுட் ஸ்டார் ஐகான் அமீர்கான் தெரிவித்து இருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் காலா. இப்படத்தினை வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தனுஷ் தயாரித்து இருக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹீமா குரோஷி என பலர் முக்கிய வேடத்தை ஏற்று இருக்கிறார்கள். பலகட்ட தடைகளை மீறி படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. படம் எப்படி இருக்குமோ என ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் படக்குழுவிற்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. கபாலி படத்தில் விட்டதை காலாவில் ரஞ்சித் இப்படத்தில் பிடித்தே ஆக வேண்டும் என்பதால் பலரின் எதிர்பார்ப்புகளும் ரசிகர்களின் விமர்சனத்தின் மீதே இருந்தன.
இதை தொடர்ந்து, காலா எல்லா தரப்பிலும் நல்ல வரவேற்புகளை பெற்றுள்ளது. காலா படத்தில் ஸ்டார் ரஜினியின் ட்ரேட் மார்க்குகளை ரஞ்சித் அற்புதமாக கையாண்டு இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களையும் ரஞ்சித் விடுவிடாமல் அவர்களை திருப்திப்படுத்தவே முயன்றுள்ளார். எப்போதும் போல, காலாவிலும் ரஜினி மட்டுமே முன்னாள் நிற்கிறார். படத்தில் ரஜினியை தவிர ஈஸ்வரி ராவ், சமுத்திரகனியின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றுள்ளது. நானா படேகரை சரியாக கையாளவில்லையோ என சில இடங்களில் சாதாரண ரசிகனுக்கு கவலையும் எழுகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது காலாவை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
கோலிவுட் பிரபலங்களே முதல் நாள் முதல் காட்சியில் காலாவிற்கு அப்ளாஸ் தட்டி செல்கின்றனர். ரஜினிக்கு இங்கு மட்டுமல்ல எல்லா சினிமா உலகிலும் பிரபலங்களும் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய ஒரு ட்வீட் சாட்சியாக அமைந்து பலரின் புருவத்தையும் உயர்த்தி விட்டது. நானும் ரஜினியின் தீவிர ரசிகன் தான் என பாலிவுட் ஸ்டார் ஐகான் அமீர்கான் வெளியிட்டு இருக்கும் அந்த ட்வீட் வைரலாக பரவி வருகிறது. அப்பதிவில், ரஜினி அவர்களின் மிகப்பெரிய ரசிகனாக விரைவில் காலா படத்தை பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
