கலைக்கட்ட போகும் பிக் பாஸ் சீசன் 4 எப்போது தெரியுமா? அடுத்த வனிதா,மீரா மிதுன் ரெடி!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி 3 சீசன்களை தொடர்ந்து தற்போது நான்காவது சீசனுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. உலகமே பல பிரச்சனைகளை சந்தித்தாலும் விஜய் டிவி தன்னுடைய வேலையில் கரெக்டாக உள்ளது.

மக்கள் கவரும் வகையிலும் வெறுக்கும் வகையிலும் போட்டியாளர்களை தேர்வு செய்து ஒரே வீட்டிற்குள் அடைத்து ஒருவரை ஒருவர் சண்டை போட வைத்த டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுக்கொள்வதில் கில்லாடிதான்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியை தற்போது செய்து வருகிறார்களாம். அதில் சமீபகாலமாக டிக்டாக்கில் கவர்ச்சியில் கண்டம் செய்யும் இலக்கியா, ரம்யா பாண்டியன் பங்குபெற போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியின் விளம்பர வீடியோக்கள் இந்த மாதம் 22ம் தேதி முதல் ஒளிபரப்பை பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் திட்டவாமாக தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியினால் பைத்தியம் பிடித்து அலையும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் வனிதா, மீராமிதுன் போன்றவர்கள் ஆடி அடங்கி விடுங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி கொடுப்பதற்கு பார்த்திபனுக்கு அழைத்து விடுத்ததாகவும், ஆனால் தற்போது கமல்ஹாசனை உறுதி செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.