fbpx
Connect with us

Cinemapettai

அடுத்து திவாலாகும் தனியார் வங்கிகள் லிஸ்ட்.. கம்பி நீட்டுவதற்குள் பணத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்

bank-list

India | இந்தியா

அடுத்து திவாலாகும் தனியார் வங்கிகள் லிஸ்ட்.. கம்பி நீட்டுவதற்குள் பணத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்

இந்தியாவில் அடுத்தடுத்து முக்கியமான தனியார் வங்கிகள் திவாலாக போவது உறுதி என்று சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது எஸ் பேங்க் திவாலாகி உள்ளதை உறுதி செய்துவிட்டது. இந்த வங்கி ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதிக கடன் கொடுத்ததால் இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாஜகவின் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அகல பாதாளத்தில் விழுந்துவிட்டதாக சுப்ரமணியம் சுவாமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பங்குச்சந்தை 7 லட்சம் கோடி சரிந்து உள்ளதாக கூறியுள்ளார்.

எஸ் பேங்க் திவாலானது அடுத்தடுத்து தனியார் வங்கிகள் திவால் ஆவதற்கு ரெடியாக உள்ளதாக கூறியிருப்பது இன்னும் பயம் கலந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தற்போது எஸ் பேங்கிள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் அடுத்ததாக 10 வங்கிகள் வரிசைகட்டி நிற்பதாகவும் அதில் முதலிடத்தில் ஆக்சிஸ் வங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனுடன் சேர்ந்து ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகள் குறிப்பிடத்தக்கது.

தனியார் வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை என்று சுப்பிரமணியசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து கொண்டே ஆளும் கட்சியினரை வெளுத்து வாங்கும் சுப்பிரமணியசாமி கூறியிருப்பது நடைமுறைக்கு சாத்தியமா என்று மக்கள் வழக்கம்போல் குழப்பத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top