மணிரத்தினத்தின் 350 கோடி பட்ஜெட் படத்தில் இந்த சின்ன பொண்ணா? அதிர்ஷ்டசாலிதான்!

லைக்கா தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறாராம் சாரா அர்ஜுன்.

தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாரா அர்ஜுன். அதற்குப் பின்னர் சைவம், விழித்திரு, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமான சாரா, நடிகையாக நடிக்க உள்ள முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்த சாராவிற்கு தற்போது 15 வயதாகிறது.

இந்த வயதில் நடிகையாக வளம் வர உள்ள சாராவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் பொன்னின் செல்வன் படத்திற்கு பின்னர் பட வாய்ப்புகளும் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளும் நடித்துள்ளதால் வாய்ப்புகள் குவியும் என்று காத்துக் கொண்டிருக்கிறாராம்.