fbpx
Connect with us

அஜித் வந்தால் தானாக எழுந்து மரியாதை கொடுக்க தோன்றும்.. சொல்வது யார் தெரியுமா?

ajith-vedhalam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் வந்தால் தானாக எழுந்து மரியாதை கொடுக்க தோன்றும்.. சொல்வது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளவர் அஜித். இவர் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார் என்பதை உணர்த்தும் விதமாக வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

2015ஆம் ஆண்டு தங்கச்சி சென்டிமென்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வேதாளம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருப்பார். ரெட் படத்திற்கு பின் கேங்ஸ்டர் சென்டிமெண்ட் கலந்த படத்தில் நடித்திருப்பார் அஜித்.

இந்த படத்தில் அஜித்குமாருக்கு அம்மாவாக சுதா நடித்துருப்பார், அந்த கதாபாத்திரம் கண் தெரியாதவராக தம்பி ராமையா உடன் நடித்திருப்பார்.

அவர் ஒரு பேட்டியில் ‘சில பேர பார்த்தாலே எழுந்து நின்று மரியாதை செலுத்த தோணும் அப்படிப்பட்ட மனிதர் தான் அஜித்’ என்று கூறியுள்ளார். தன்னைப் போல் ஒரு சின்ன ஆர்டிஸ்ட் அவ்வளவு பெரிய இடத்திலுள்ள அஜித் மரியாதை கொடுப்பதில் சினிமா துறையில் வேறு எவரும் செய்வதில்லை. அவரிடம் இருந்து இதுபோன்ற மரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்கள்.

ஏற்கனவே இவர் ரெட் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது ஆனால் அப்போது நடிப்பதற்கான சூழ்நிலை அமையவில்லையாம். அதற்கு பின்னர் மீண்டும் அஜித் சுதாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். உடனே இயக்குனர் உறுதி செய்துவிட்டாராம்.

தல அஜித் எப்பொழுதுமே தன்னை சுற்றி இருப்பவர்களை மரியாதையுடன் நடத்துவது மட்டும் இல்லாமல் சந்தோஷமாக வைத்துக் கொள்வாராம். அதனால்தான் தற்போது வரை ரசிகர்கள் அவரை தலைமேல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top