திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான 6 பிரபல நடிகைகள்.. ஆசையில்லாத கோயிலுக்கு பூசை எதுக்கு

பொதுவாகவே நடிகர், நடிகைகளின் நடிப்பு திறமையும் தாண்டி அவர்களின் இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அவர்களுடைய ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் சமூகவலைதளங்களில் வலைவீசி தேடுவார்கள். அதற்கேற்றார் போல்  சில முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் குடும்ப வாழ்க்கையின்  நிகழ்வுகளை புகைப்படமாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக்கி உள்ளனர்.

அவ்வாறு வெளிவந்த தகவலின் படி பார்த்தால், சில முன்னணி கதாநாயகிகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்ததை வெளிப்படையாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். அதைப்பற்றிய ஒரு லிஸ்ட் இதோ!

சரிகா தாக்கூர்: குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான சரிகா, 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை காண தேசிய விருதினை பெற்றார். இவர் பெரும்பாலும் பல ஹிந்தி, மராட்டி திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் நடிகரான உலகநாயகன் கமலஹாசனுடன் லிவிங் (living together) கில் வாழ்ந்தபோது கர்ப்பம் தரித்தார். நடிகர் கமல்ஹாசன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பின்னர் சரிகாவை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு இடையையும் மணமுறிவு ஏற்பட்டது.

sarika-cinemapettai

ஏமி ஜாக்சன்: முன்னணி நடிகையான ஏமி ஜாக்சனும் திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இவரின் பாய்பிரெண்ட் ஜார்ஜ். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்துள்ளனர்.

amy-jackson-cinemapettai

கல்கி கோய்ச்லின்: ஹிந்தி நடிகையான கல்கி கோய்ச்லின் தனது காதலரான,கை ஹெர்ஷ்பெர்க் (Guy Hershberg) என்ற இஸ்ரேலிய இசைக்கலைஞருடன் தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தினார். இவருடைய இந்த திடீர் அறிவிப்பிற்கு பிறகு பாலிவுட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

kalki-koechlins-cinemapettai

நேஹா தூபியா: ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் நேஹா தூபியா என்ற பிரபல நட்சத்திரமும் அங்காட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்ததாக ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

neha-dhupia-cinemapettai

ஸ்ரீ தேவி: 80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகை ஸ்ரீதேவியும் பிரபல தொழிலதிபர் போனி கப்பூரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஸ்ரீதேவி கர்ப்பம் தரித்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

sri-devi-cinemapettai

பூர்ணா அப்துல்லா: அஜித்தின் பில்லா-2 படத்தில் நடித்திருந்த பூர்ணா அப்துல்லாவுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்னதாகவே கர்ப்பமாகி உள்ளார். அதாவது விரைவில் திருமணத்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பூர்ணா ஷாக் கொடுக்கும் வகையில் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

bruna-billa2
bruna-billa2

பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோராவின் தங்கை அமிர்தா அரோரா திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி விட்டார்.