டிஆர் தூக்கிவிட்ட 5 நடிகைகள்.. கவர்ச்சிக்காக பிரபலமான அந்த நடிகை

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் மூலம் பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவ்வாறு டி ஆர் அவர்களால் பிரபலமான ஐந்து நடிகைகளை பார்க்கலாம்.

அமலா : டி ராஜேந்தர் இயக்கிய மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அமலா அறிமுகமானார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. அதன் பிறகு பல படங்கள் நடித்து 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மொழி படங்களிலும் நடித்தார்.

நளினி : விஜயகாந்த், சத்யராஜ், மோகன், மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்தவர் நடிகை நளினி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். நளினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் உயிருள்ளவரை உஷா. இப்படத்தை டி ராஜேந்தர் இயக்கியிருந்தார்.

ஜோதி : நடிகை ஜோதி ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
டி ராஜேந்தர் இயக்கிய இவரது முதல் திரைப்படமான இரயில் பயணங்களில் படம் வெற்றிப் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வந்தார். மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த ஜோதி 2007-இல் உயிரிழந்தார்.

ஜீவிதா : 80 காலகட்டத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை ஜீவிதா. இவர் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். இவர் டி ராஜேந்தர் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு உறவை காத்த கிளி படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்தின் மூலம் ஜீவிதா ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

மும்தாஜ் : மாடல் அழகியான மும்தாஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். டி ராஜேந்தர் எழுதி, இயக்கி, தயாரித்து இருந்த மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக மும்தாஜ் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்