Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ், ஹன்ஷிகா, சாய் பல்லவி… இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா?

ற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் டாப் நடிகைகள் சிலர், அவர்களது பயணத்தை எங்கு தொடங்கினார்கள் என்று அலசியதில் கிடைத்த ஆச்சரியத் தகவல்கள்..!

ரெஜினா கஸாண்ட்ரா :

ரெஜினா

தமிழ், தெலுங்கு, கன்னடம் என இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் ரெஜினா. இவரது அம்மாவின் நண்பர் ஒருவர் சொன்னதற்கிணங்க சிறு வயதிலேயே விளம்பர மாடலாகக் களமிறங்கினார். பின்னர், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ‘கண்ட நாள் முதல்’  படம் மூலம் லைலாவுக்குத் தங்கையாக சினிமாவுக்குள் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் ‘மாநகரம்’ மற்றும் ‘சரவணன் இருக்க பயமேன்’ போன்ற படங்கள் தமிழில் வெளியானது. செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’  படத்துக்கு பல பேர் வெயிட்டிங்.

சாய் பல்லவி :

சாய் பல்லவி தாம் தூம் படம்

இவருக்கு ‘பிரேமம் மலர் டீச்சர்’ என்ற ஒன்றைத் தவிர வேறு அறிமுகமே தேவையில்லை. ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா?’ நிகழ்ச்சியில் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ‘பிரேமம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பின் ‘களி’ எனும் மலையாளப் படத்திலும் துல்கருக்கு ஜோடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, அதற்கும் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால் இவர் திரையில் தோன்றிய முதல் படத்தின் பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், சாய் பல்லவி முதன்முதலாக தன் முகம் காட்டியது ‘தாம் தூம்’ திரைப்படத்தில்!

சமந்தா :

சமந்தா

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `காமர்ஸ்’ முடித்த நம் சம்முவுக்கு, திடீரென ஒரு நாள் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் காரணம் அவருடைய தோழியின் பிறந்தநாள் பார்ட்டிதான். அங்கு எடுத்த புகைப்படங்களில் அவ்வளவு அழகாய்த் தெரிய, மாடலிங் வாய்ப்பு கிடைத்து, வெற்றிகரமாக தன் பயணத்தைத் துவங்கினார். அதற்குப் பின் படிப்படியாக முன்னேறி பல டாப் ஹீரோக்களுடன் நடித்து `மோஸ்ட் வான்டெட்’ ஹீரோயினாக கோலிவுட்டைக் கலக்கி வருகிறார். ஆனால், இவர் தன் முகத்தைத் திரையில் காட்டிய முதல் படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. அந்தப் படத்தில் சிம்பு இயக்கும் `ஜெஸ்ஸி’ படத்தின் நாயகி அவர் தான்.

ஜனனி அய்யர் :

ஜனனி அய்யர்

இவரும் மாடலிங் மூலமாகத்தான் சினிமாவுக்குள் நுழைந்தார். மாடலிங் செய்துகொண்டே இரண்டு படங்களில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். முதல் படம் ‘திரு திரு துறு துறு’, இரண்டாவது படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. என்ன பாஸ் ஷாக்கா இருக்கா?. ஆம், அதில் கே.எஸ்.ரவிக்குமார் இடம்பெறும் சீன்களில், அவரின் உதவி இயக்குநராக நடித்திருப்பார். படத்தை இன்னொரு முறை பார்த்தால் உற்று கவனிக்கவும். பின்னர், ‘அவன் இவன்’ படத்தில் ஆரம்பித்து ‘அதே கண்கள்’ வரை சிறப்பாக நடித்து, தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் ஜனனி.

பூஜா தேவாரியா :

பூஜா தேவாரியா

2010 ஆம் ஆண்டு `ஸ்ட்ரே ஃபேக்டரி’ என்ற நிறுவனத்துடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். ‘டர்ட்டி டான்ஸிங்’ என்ற பாடலைப் பார்த்த கீதாஞ்சலி செல்வராகவன் அவருடைய கணவரிடம் இவரைப் பற்றிக் கூறி, படத்தில் நடிக்க வைக்க சொல்லி பரிந்துரைத்திருக்கிறார். அப்படி வந்த வாய்ப்புதான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மயக்கம் என்ன’. அந்தப் படத்தில் தனுஷின் கேங்கில் பூஜாவும் ஒரு ஆள். அதற்கு பின் ‘இறைவி’, ‘குற்றமே தண்டனை’, `ஆண்டவன் கட்டளை’ என அடுத்தடுத்த படங்கள் மூலம்  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒவ்வொரு அடியையும் அழுத்தமாய் எடுத்து வைத்து வருகிறார் பூஜா.

ஶ்ரீதிவ்யா :

ஶ்ரீதிவ்யா

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நம் `ஊதா கலர் ரிப்பன்’ ஶ்ரீதிவ்யா, தனது மூன்று வயதிலிருந்தே நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர். இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘ஹனுமான் ஜங்ஷன்’. தெலுகில் வெளியான இத்திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதற்கு பின்னர் பல தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாகக் காலடி எடுத்து வைத்தவர், ‘மாவீரன் கிட்டு’, `சங்கிலி புங்கிலி கதவத் தொற’ என தொடர்ந்து கலக்கி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் :

கீர்த்தி சுரேஷ்

தற்போதைய தமிழ் சினிமா உலகில் முக்கியமான நடிகை. இவரும் தனது சினிமா பயணத்தை குழந்தை நட்சத்திரமாகவே தொடங்கினார். தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘பைலட்’ எனும் மலையாளப் படம்தான் இவர் நடித்த முதல் திரைப்படம். அதற்கு பிறகு சில படங்களில் குழந்தை வேடத்தில் நடித்து வந்தார். பின்னர், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் `ரஜினி முருகன்’, `தொடரி’, `பைரவா’ என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவருகிறார்.

ஹன்ஷிகா மோத்வானி :

ஹன்சிகா மோத்வானி

தொலைக்காட்சி சீரியலில் இருந்து நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர். சிறுமியாக ‘ஷகலக பூம்பூம்’ எனும் பிரபலமான ஃபேன்டஸி நாடகத்தில் நடித்து, சில விருதுகளையும் பெற்றுள்ளார். அதன் பின் ‘ஹவா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டார். சில ஹிந்தி படங்களில் குழந்தை வேடத்தில் நடித்தவர், தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக நுழைந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top