பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வென்ற நடிகை.. தமிழ்ல விட்டதை தெலுங்குல பிடிச்சிட்டாங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தமிழில் இந்நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

பிக் பாஸ் 5 சீசன்கள் முடிந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வந்தது. அதேபோல் தெலுங்கில் பிக்பாஸ் நான்ஸ்டாப் என்று ஒளிபரப்பான நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிகழ்ச்சியில் அஜய் குமார், மகேஷ் விட்டா, பிந்துமாதவி, பாபா பாஸ்கர் போன்ற பல நட்சத்திரங்கள் பங்கு பெற்றனர். இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை நடிகை பிந்து மாதவி பெற்றுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இல் பங்குபெற்றார்.

இந்நிகழ்ச்சியில் வையல்காடு என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைத்த பிந்து மாதவி போட்டியின் இறுதி சுற்று வரை சென்று இருந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நற்பெயரும் கிடைத்தது. ஆனால் தமிழில் கிடைக்காத டைட்டில் வின்னர் பட்டம் தற்போது தெலுங்கு பிக்பாஸில் பிந்துமாதவிக்கு கிடைத்துள்ளது.

மேலும் தெலுங்கில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற அங்கீகாரமும் பிந்து மாதவிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிந்து மாதவி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விருது வாங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் பிந்து மாதவிக்கு அதிக படங்கள் வர வாய்ப்புள்ளது. சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து, அதை தக்க வைத்துக் கொண்டால் கண்டிப்பாக முன்னணி நடிகையாக பிந்து மாதவி வலம் வர வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்